புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (23:25 IST)

பழிக்கு பழிவாங்க காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான 'தல அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களையும் மீறி நல்ல வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் டீசர் அதிக லைக்குகள் பெற்ற உலகின் முதல் வீடியோ என்ற பெருமையையும் பெற்றது. அதே நேரத்தில் இந்த படத்தின் டீசருக்கும், டிரைலருக்கும் மிக அதிகளவிலான டிஸ்லைக்குகளும் கிடைத்தன. இந்த டிஸ்லைக்குகள் விஜய் ரசிகர்களால் கொடுக்கப்பட்ட பரிசு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை



 
 
இந்த நிலையில் '[மெர்சல்' டீசர் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் பழிக்கு பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். அதாவது 30 நிமிடத்தில் 25 ஆயிரம் டிஸ்லைக்குகளும், 2 
மணி நேரத்தில் 50 ஆயிரம் டிஸ்லைக்குகளும், 12 மணிநேரத்தில் 100 ஆயிரம் டிஸ்லைக்குகளும், 24 மணி நேரத்தில் 150 ஆயிரம் லைக்குகளும் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 
 
மொத்தத்தில் 250 ஆயிரம் டிஸ்லைக்குகள் கொண்டு வர வேண்டும் என்பதே டார்கெட்டாம். அஜித், விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களின் இந்த போட்டியால் நாளை மறுநாள் யூடியூப் அதிரப்போவது என்னவோ நிச்சயம்