புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (09:55 IST)

இதெல்லாம் உங்களுக்கே நியாயமா சார்? – போனி கபூர் செயலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!

அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்த அப்டேட் புத்தாண்டில் வெளியாகலாம் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் போனி கபூரின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடிக்க ஹெச்.வினோத் இயக்கும் படம் ‘வலிமை’. இந்த படத்தை அஜித்தின் முந்தைய படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஓராண்டு காலம் முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இதுவரை டைட்டில் போஸ்டர் கூட வெளியாகவில்லை. ஒவ்வொரு நல்ல நாள் வந்தாலும் இன்று வலிமை அப்டேட் வருமா என்று காத்திருக்க தொடங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

சிலர் பொறுமையிழந்து அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டுதல், பேனர் வைத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்டேட் கேட்டு தொல்லை செய்ய வேண்டாம் என்ற அப்டேட் மட்டும் வெளியானது.

இந்நிலையில் தற்போது புத்தாண்டில் வலிமை பட அப்டேட் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னதாக அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக்கி வருகிறார். வக்கீல் சாப் என்ற அந்த படத்தின் பணிகள் முடிந்துள்ளதாக அப்டேட் வெளியிட்டுள்ளார். வலிமை அப்டேட்டை எதிர்பார்த்த அஜித் ரசிகர்கள் போனி கபூர் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.