வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (17:11 IST)

அஜித் ரசிகர்களிடம், விக்னேஷ் சிவன் எதற்காக மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது பிறந்தநாள் வரும் மே 1 ஆம் தேதி ஆகும்.  இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளன்று டிவிட்டரில் டிரண்ட் செய்ய # aTHALABDayFestivalCDP  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதுடன் ஒரு காமன் டிபியையும் தயர் செய்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்குமார் பிறந்தநாளுக்கு ஒரு காமன் டிபியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 
இந்த காமன் டிபியை வெளியிட்ட விக்னேஷ் சிவன்  கூறியதாவது : நண்பர்களே மன்னித்துவிடுங்கள் ... நான் இணையதள நெட்வொர்க் வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன். உலகில் உள்ள தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிற்கு நிறைய லைக்குகள்  விழுந்துவருகின்றன.