1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

தன்னுடைய பைக்கிற்கு தானே பெட்ரோல் நிரப்பும் அஜித்: வைரல் புகைப்படம்

ajith bike
பிக்பாஸ் சீசன் 6 எப்போது? வெளியான அசத்தல் தகவல் From October 2nd 2022
தன்னுடைய பைக்கிற்கு தானே பெட்ரோல் நிரப்பும் அஜித்: வைரல் புகைப்படம்
நடிகர் அஜீத் தற்போது இங்கிலாந்து நாட்டில் பைக் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் என்றும் அவர் தனது குழுவினருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில்  அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் தன்னுடைய பைக்கிற்கு தனக்குத்தானே பெட்ரோல் போடும் காட்சி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் அஜீத் நடித்து வரும் ’ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூலை முதல் வாரம் நடைபெற உள்ளது
 
இந்த படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது