அஜித் 64 படம் கைமாறுகிறதா?... சூப்பர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளருக்கு கிடைத்த ஆஃபர்!
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் முதலில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்து இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் இருவரும் இணைய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த பிராஜக்டை தனக்கு விஸ்வாசம் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.