புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (08:50 IST)

சென்னையின் முக்கியப் பகுதியில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு… வைரல் ஆகும் புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அவரின் 61 ஆவது படம் தற்போது ‘அஜித் 61’ என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது அஜித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் H வினோத். முன்னதாக சென்னையின் பிரபல மால் ஒன்றில் ஷூட் நடந்தது. அதையடுத்து இப்போது காசிமேடு பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.