அஜித் 57... இந்த மாதம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அஜித் சண்டைக் காட்சி ஒன்றில் பைக் வீலிங் செய்யும் வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. பொங்கல் தினத்தில் வெளியிடப்படுமா இல்லை அதற்குப் பிறகா என்பது தெரியவில்லை.
அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துவரும் இந்தப் படத்தில் கடைசி ஷெட்யூல்ட் ஜனவரி 18 தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.