மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாராய்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தலைவர் 169. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.