1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:44 IST)

ஐஸ்வர்யா-ரித்விகா மோதல்! பிக்பாஸூக்கு நன்றி சொல்லும் மகத் வீடியோ

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள். ஐஸ்வர்யாவும் வைஷ்ணவியும் போட்ட சண்டை பொறுமையை சோதிக்கும் அளவில் இருந்தது. சொன்னதை இருவரும் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே ஐஸ்வர்யா மாறி வருவதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐஸ்வர்யா, ரித்விகாவுடன் சண்டை போடுகிறார். இந்த சண்டையை சிறையில் இருக்கும் பார்த்து கொண்டிருக்கும் மகத், பிக்பாஸூக்கு நன்றி கூறுகிறார். நல்ல வேளை என்னை சிறையில் அடைத்தீர்கள் பிக்பாஸ், இந்த நேரம் மட்டும் நான் அங்கு இருந்தால் ஃபயர் ஆகியிருப்பேன் என்று கூறுகிறார்.
 
ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் என்ன காரணத்திற்காக சண்டை போடுகிறார்கள் என்பது புரமோவில் சரியாக தெரியவில்லை. ஆனாலும் தினமும் ஒருவருடன் சண்டை போட்டு வரும் ஐஸ்வர்யாவை வெளியேற்ற பார்வையாளர்கள் நினைத்தாலும் பிக்பாஸ் அவரை காப்பாற்றி கொண்டே வருகிறார். இந்த வாரமும் ஐஸ்வர்யாவை எவிக்சன் பட்டியலில் இருந்து பிக்பாஸ் காப்பாற்றிவிட்டார் என்பது தெரிந்ததே