புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:54 IST)

இளையாராஜாவோடு திடீர் சந்திப்பு…. வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினியின் புகைப்படங்கள்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜாவை சந்தித்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா இளையராஜாவை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர் ” மேஜிக்கலான, மியுசிக்கலான ஒரு நண்பகல். எப்போதும் இளையராஜாவோடு நேரம் செலவிடுவது மகிழ்ச்சியான விஷயம். Work mode on” எனக்கூறியுள்ளார். இதனால் இளையராஜா ஐஸ்வர்யா ரஜினியின் படத்துக்கு இசையமைக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.