செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (16:16 IST)

நான் ரொம்ப பிஸி… அதுதான் கஷ்டமே… புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னால் இப்போது அதிக கதைகளைக் கேட்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “முன்பெல்லாம் நான் என்னிடம் யாராவது கதை சொல்ல மாட்டார்களா என ஆவலாக இருப்பேன். ஆனால் இப்போது நான் அதிக படங்களில் நடிப்பதால் என்னால் கதைகளை அதிகமாக கேட்க முடியவில்லை. ஆனால் எனக்காக கதை சொல்ல பலர் காத்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.