வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 18 மே 2023 (09:44 IST)

ராஷ்மிகாவின் உழைப்பை குறைத்து மதிப்பிடவில்லை… ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் ஃபர்ஹானா.

சமீபத்தில் ரிலீஸான இந்த திரைப்படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ஆந்திராவுக்கு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்கு பதில் தான் நடித்திருந்தால் அந்த வேடத்துக்கு சிறப்பாக பொருந்தி இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “புஷ்பாவில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த வேடத்தில் நடித்திருந்தால் சிறப்பாக பொருந்தி இருப்பேன்.” என்று கூறியுள்ளார். ஆனால் அவரின் இந்த பதில் பல சர்ச்சைகளை உருவாக்க இப்போது அதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் “என்னுடைய கருத்து கெடுவாய்ப்பாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் ராஷ்மிகாவின் உழைப்பை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த படத்தில் அவரின் நடிப்பு மீது எனக்கு அபிமானம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.