ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா.
கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் திரையரங்க ரிலீஸ் நவம்பர் 11 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது வருட இறுதியில் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரிலீஸ் ஆகிறது.