திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (11:31 IST)

மொள்ளமாரி ஐஸ்வர்யா ராஜேஷ்... இரட்டை முகத்தை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் உடைகளை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் இளைஞர்கள், அரசியல் எதிர்க்கட்சிகள் , நடிகர் நடிகைகள் என பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து " இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை இணையவாசிகள் பங்காகமாக கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர். காரணம், கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று இந்தியில் பேசியது தான். இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டு "எதுக்கு இந்த கேவலமான வேலை? என விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசும் ஐஸ்வர்யா ராஜேஷின் மற்றொரு சமூகவலைத்தளத்தில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அதாவது, பேட்டி ஒன்றில் " தனக்கு சேரி என்றால் என்ன? அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது என பிறப்பிலே டான் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது போல் பேசியுள்ளார். ஆனால், இதற்கு முன்னர் அவரே, மேடை ஒன்றில் தன் வளர்ச்சியை குறித்து பேசும் போது, தான் சேரியில் பிறந்து வளர்ந்தவள் என்று கூறி sympathy கிரியேட் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகையின் இந்த மட்டமான வேலையை ஆளாளுக்கு விமர்சித்து வருகின்றனர்.