ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 மே 2023 (06:49 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான உடையில் ஐஸ்வர்யா ராய்!

உலகளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று. வருடா வருடம் நடக்கும் இந்த விழாவில் தங்கள் படங்கள் திரையிடப்படுவதும், தாங்கள் கலந்துகொள்வதும் கலைஞர்களுக்கு பெருமிதமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த வித்தியாசமான உடை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.