அர்ஜுன் தாஸுடன் காதல்? விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதல் வதந்திக்கு முற்றுப்பு வைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் , கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹார்டின் போட்டு காதலில் இருப்பது போல் சொல்லாமல் சொன்னார்.
இதனால் பதறிப்போன பெண் ரசிகைகள் இருவரும் காதலிக்கிறார்களா? என அதிர்ச்சி அடைந்து அந்த புகைப்படத்தை வைரலாக்கினார். இந்நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் அளித்த ஐஸ்வர்யா லட்சுமி,
"நண்பர்களே எனது கடைசி பதிவு இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு போட்டோ எடுத்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்று முதல் தற்போது வரை எனக்கு குறுஞ்செய்தி வந்துக்கொண்டிருக்கிறது.
எனக்கு மெஸேஜ் அனுப்பும் அனைத்து அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு இப்போது சொல்கிறேன் "அவர் உங்களுடையவர்" என்று பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.