புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (08:23 IST)

கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் இன்ஸ்டாக்ராம்

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிளிர் என்ற படத்தில் கதாநாயகியாக மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வரும் பிரபலங்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யா தத்தா அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் இருந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களாக தான் கவர்ச்சி போட்டோக்களை ஒன்றன் பின் ஒன்றாக இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் பார்வையில் தென்பட துவங்கியுள்ளார். அந்தவகையில் தற்ப்போது ஜல்லடை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து போஸ் கொடுத்த அழகிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வர்ணனைக்கு ஆளாகியுள்ளார்.