ஹீரோ இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்
விஷால் நடித்த இரும்புத்திரை என்ற படத்தை இயக்கி கோலிவுட் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தை திருப்பிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் சமீபத்தில் இயக்கிய ’ஹீரோ’திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் கூறிய கல்வி குறித்த பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் அலசப்பட்டு வரும் நிலையில் இதே போன்று ஒரு சமூகப் பிரச்சனையை அடுத்த படத்திலும் அவர் கையில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது
இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது
தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன், அவர் ஹீரோ இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் இணைவார் என்று தெரிகிறது
விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் பிரேக் கொடுத்த இயக்குனர் மித்ரன், கார்த்தியுடனும் இணைந்து ஒரு ஹிட் படத்தை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது