1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:14 IST)

’’ ஏலே ’’திரைப்படம் தொலைக்காட்சிகளில் ரிலீஸ்.... தயாரிப்பு நிறுவனம் அதிரடி

ஏலே படம் வெளியீடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள ஏலே திரைப்படம் தொலைக்காட்சிகளில்  நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியான 14 வது நாளில், அப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து,திரையரங்குகளில் வெளியாகின்ற படத்தை சுமார் 30 நாட்களுக்கு பிறகுதன் ஒடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற புதிய விதியை சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.

 
இந்நிலையில் ஏலே திரைபடத் தயாரிப்பாளர் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம்கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டரில் ரிலீசாகும் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

எனவே பிப்.,12 தேதி ரிலீசாக இருந்த ஏலே படம் வெளியாவது தாமதமாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது,ஏலே படம் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு  அறிக்கைவெளியிட்டுள்ளது.#Aelay 

அதில், தியேட்டர் உரிமையாளர்களின் புதிய விதியால் ஏலே திரைப்படத்தை எங்களால் தியேட்டர்களில் வெளியிடமுடியவில்லை எனறு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.