புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (15:56 IST)

விஜய்க்கு சலுகை கொடுக்க தயாராக இருக்கும் அரசு – பின்னணி இதுதான்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்துக்கு என்ன சலுகைகள் வேண்டுமானாலும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த படம் பொங்கலன்று திரையரங்குகளில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் திரையரங்கில்தான் ரிலீஸாக வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் நிலையில் தமிழக அரசு எந்த சலுகைகளை வேண்டுமானாலும் அளிக்க தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் தமிழக அரசியக் களம்தான். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு ரஜினி, கமல் என இரண்டு சினிமா நடிகர்களும் அரசியலில் இறங்கியுள்ளதால் அவர்களில் யாருக்காவது விஜய்யின் ஆதரவு கிடைத்துவிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என ஆளும் கட்சி நினைப்பதால் மாஸ்டருக்கு எந்த சலுகை வேண்டுமானாலும் அளிக்கும் முடிவில் உள்ளதாம்.