வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:48 IST)

"ஆதித்ய வர்மா" படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  அண்மையில் கபீர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகி  சூப்பர் ஹிட் அடித்தது. 
தற்போது தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்துள்ளார். மேலும்  நடிகை பிரியா ஆனந்த் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
அண்மையில் இப்படத்தி டீசர் மற்றும்  பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பை பெற்றதையடுத்து படத்தின் ரிலீஸ் வருகிற நவம்பர் 8-ம் தேதியில் இருந்து நவம்பர் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.