புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (15:17 IST)

அந்த நடிகர் வீட்டில் வெளிநாட்டு பெண் இருக்கிறார்… அவருக்குக் கொரோனா இருக்குமா ? சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீரெட்டி !

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டுப் பெண் இருப்பதால் அவருக்குக் கொரோனா இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக அவ்வபோது சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் ‘ பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டு பெண் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கொரோனா பரவி இருக்குமா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அடிக்கடி பவன் கல்யாணை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி இம்முறை பவனின் மூன்றாவது மனைவியான அண்ணா லெஸ்நெவாவைக் குறிப்பிட்டுதான் அவ்வாறு கூறியுள்ளார்.