திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (09:39 IST)

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா!

வருத்தப் படாத வாலிபர் சங்கப் புகழ் ஸ்ரீதிவ்யா தமிழில் மறுபடியும் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அப்படி சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.

இதனால் தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக ஓரம்கட்டப்பட்டார். கடைசியாக அவர் மருது படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் டைகர் என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.