திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழ் தெலுங்கு திரைப்பட நடிகையும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவை சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிக்கி தவிக்கும் மற்ற மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்