வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (07:00 IST)

விஜய் நாயகி ரிச்சா பலோட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

விஜய் நாயகி ரிச்சா பலோட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தளபதி விஜய் நடித்த ஷாஜகான் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரிச்சா பலோட் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
ஷாஜகான் படத்தின் வெற்றிக்கு பிறகு காதல் கிறுக்கன் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன்பின்னர் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
யாகாவராயினும் நாகாக்க என்ற படத்தில் அவருடைய கேரக்டர் நன்றாக பேசப்பட்டது. மேலும் அவர் தெலுங்கு கன்னடம் இந்தி படங்களிலும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரிச்சா பலோட் மேலும் சில படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் விரைவில் அவரை திரையில் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது