வியாழன், 6 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மார்ச் 2025 (11:15 IST)

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை! ஐபிஎஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

Ranya Rao

பிரபல நடிகையும், ஐபிஎஸ் அதிகாரியின் மகளுமான ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகை ரன்யா ராவ். இவர் கன்னடத்தில் மானிக்யா, பட்டாகி ஆகிய படங்களிலும், தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஆவார்.

 

சமீபத்தில் துபாயில் இருந்து பெங்களூர் வந்த ரன்யா ராவ் 15 தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை விசாரித்த அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தபோது கிலோக்கணக்கில் தங்கம், கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

இதுத்தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்த ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும், அவள் தங்களையும், தனது கணவரையும் விட்டு பிரிந்து வாழ்கிறாள். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K