1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:24 IST)

நடிகை ராணி என்மீது கொடுத்த பாலியல் புகார் பொய்யானது: நடிகர் விளக்கம்...

துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் நடிகை ராணி நேற்று காலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந் நிலையில் மாலையில் நேற்று மாலையே ராணி இவ்வழக்கை வாபஸ் பெற்றார். இது பரபரப்பு செய்திகளாக நேற்று அமைந்திருந்தன. இந்நிலையில் இன்று (16அக்டோபர்) சண்முகராஜன் தன்மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும், தான்  பாலியல் ரீதியாக ராணியை தீண்டவில்லை எனவும் செய்தியாளர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல்  புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் தனக்குன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு தான் இணங்க மறுத்ததால் தன்னை பலமாக கன்னத்தில் தாக்கியதாகவும்நேற்று காலையில் நடிகை ராணி போலீஸ் ஸ்டேசனில் சண்முகராஜனுக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.
 
  ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி புகார் அளித்திருந்தார்.
 
இதனையடுத்து நடிகை ராணி நேற்று மாலையில் கூறியதாவது: ’நடிகர் நடிகர் சண்முக ராஜன் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது திருவள்ளூர் அருகே செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்று காலையில் அளித்த பாலியல்  புகாரை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தார்.
 
இது குறித்து சண்முக ராஜன் கூறும்போது: ’ராணி கொடுத்த பாலியல் புகார் உண்மையில்லை: மேலும் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் இன்று மாலையில் செய்தியாளார்களிடம் இது பற்றி விளக்கம் அளித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது:
 
நான் பலநாடகங்களில் நடித்துள்ளேன் .அதனால் என் திறமை அறிந்த நடிகர் கமல்ஹாசன் விருமாண்டி திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.
 
எனகு பல நடிகர்களைத் தெரியும், அவர்களுக்கும் என்ன்னைப்பற்றி தெரியும்.என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே நடிகை ராணியால் பொய் புகார் தரப்பட்டுள்ளது.
 
இது உண்மையில்லை.நான் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை.ஷூட்டிங் நடக்கும் போது என் தரப்பு ஆட்களுகும் நடிகை ராணிதரப்பு ஆட்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இது போன்ற பாலியல் தொந்தரவுகளை நான் செய்யவில்லை. மேலும் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் ஆகியோர் இது உரிய விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேளண்டுமெனெ கேட்டுக்கொள்கிறேன். இந்த விசாரணைக்கு  நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரைத்துறையினரின் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்ற அதேசமயம் காழ்புணர்ச்சியின் காரணமாகவும் இம்மாதிரி புகார்கள் கூறப்படுகின்றனவா என்ற சந்தேகம் தான் பரவலாக விவாதிக்கப்பட்டுவருகிறது.