செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:00 IST)

என்னைக் கல்யாணம் செய்துகொள்ள இந்த கண்டீஷன் எல்லாம் இருக்கு – ரஜினி மகள் நடிகை போடும் லிஸ்ட்!

நடிகை நிவேதா தாமஸ் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைப்பவருக்கு சில தகுதிகள் வேண்டும் என சொல்லி பட்டியலிட்டுள்ளார்.

சில பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான தர்பார் படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் தனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் சில தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். அது என்னவென்றால் ‘பயணத்தின் மேல் ஆர்வம்ம் உள்ளவராகவும், எந்த விஷயமாக இருந்தாலும் முகத்திற்கு நேர் பேசுபவராகவும்,  மேலும் கணவர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.