1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (17:45 IST)

எனக்கு ஆண் துணையே தேவையில்லை, நானே போதும்: அஜித் விஜய் பட நடிகை!

Kiran
எனக்கு ஆண் துணை யாரும் தேவையில்லை என்றும் என்னை மகிழ்வித்து கொள்ள நானே போதும் என்றும் அஜித் விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அஜித் நடித்த வில்லன், விஜய் நடித்த திருமலை உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண். இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எனக்கு ஆண் துணை என்ற ஒன்றே தேவை இல்லை என்றும் என்னை மகிழ்வித்து கொள்ள எனக்கு தெரியும் என்றும் எந்த ஆணுடைய தேவையும் எனக்கு இருக்காது என்றும் கூறியுள்ளார் 
 
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் நடிகைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva