புதன், 11 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:44 IST)

பிக்பாஸ் 7 ல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல ஹீரோயின் நடிகை!

பிக்பாஸ் 7 ல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல ஹீரோயின் நடிகை!
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் களமிறங்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த லிஸ்ட்டில் இப்போது பிரபல நடிகை கிரணும் இணைந்துள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களால் வைரலாகி வரும் கிரணுக்கு 35 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.