புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (11:15 IST)

கிராமத்தில் விவசாயம் செய்யும் ரம்யா பாண்டியனின் தங்கை - இவங்க தான் அவங்களா...!

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இடுப்பு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர்     விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார். இந்நிலையில் இவரது தங்கை (சித்தப்பா மகள் ) கீர்த்தி பாண்டியன் கிராமத்தில் டிராக்டரில் புழுது ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.


ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண்பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆவார். அவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் "தம்பா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது தந்தையுடன் இணைந்து மலையாளத்தில் கீர்த்தி நடித்த ஹெலன் படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாரட்டினர். ட்ராக்டர் ஓட்டும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கீர்த்தி “விவசாயம் செய்வது தொடங்கியது. இது பொது இடம் அல்ல. இது தனிமைப்படுத்தப்பட்ட வீட்டு சொத்து. நாம் மிகவும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.