1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (14:02 IST)

பார்த்தேன் பார்த்தேன்; அய்யோ வாய கிளராதீங்களேன்! விவேகம் குறித்து டுவீட் செய்த கஸ்தூரி

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விவேகம் திரைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சிவா இயக்கத்தில் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியான திரைப்படம் விவேகம். வெளியான இரண்டு நாட்களில் வசூலை குவித்து வருகிறது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் விவேகம் குறித்து நெகட்டிவ் விமர்சனம் தீயாக பரவி வருகிறது.
 
இந்நிலையில் விவேகம் குறித்து ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு கஸ்தூரி அளித்த பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பார்த்தேன் பார்த்தேன், முதல் நாள் முதல் காட்சி. அய்யோ வாய கிளராதீங்களேன்! நானே ‘கம்’முனு இருக்கேன் என்று பதிலளித்துள்ளார். 
 
விஜய் ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை வைத்து விவேகம் குறித்து பேச வைக்க முயற்சிக்கின்றனர். கஸ்தூரி விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யூடியூப் தளத்தில் விவேகம் குறித்த நெகடிவ் விமர்சனத்துக்கு இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.