ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:31 IST)

மகளைக் கதாநாயகி ஆக்கி படம் இயக்கும் லிவிங்ஸ்டன்!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கியவர் லிவிங்ஸ்டன். இவர் ஒரு இயக்குனர் மற்றும் கதாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரு மகள்கள் உள்ளனர்.  இதில் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வரும் ஜோவிட்டா, விரைவில் தன் தந்தை லிவிங்ஸ்டன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார். சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலில் பேட்டியளித்த லிவிங்ஸ்டன் தன் மகள் ஜோவிட்டாவைக் கதாநாயகியாக்கி ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த படத்துக்கு அவரே இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.