திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (11:26 IST)

நாய்க்கு கூட சாதி பெயர் வைத்திருக்கும் நடிகை - சுட்டிக்காட்டிய ஜனனி ஐயர்!

நடிகைகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களுக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொண்டு அவர்களே ஜாதி பாகுபாடுகளுக்கு உதாரணமாக இருக்கின்றனர். இது குறித்து அஜித்தின் என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் வைப்பதெல்லாம் ஒரு பெருமை என அதற்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். 

சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதி பெயரை தூக்கிவிட்டு ஜனனி என வைத்துக்கொண்டார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நேரத்தில் மலையாள, தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது நாய்க்கு காபி மேனன் பெயர் வைத்து அதற்கென தனி இன்ஸ்டாகிராம் ப
க்கத்தை உருவாக்கி அதில் தன் நாயின் புகைப்படங்களை பதிவிட்டு வருவது பேசு பொருளாகியுள்ளது. ஜனனி ஐயரை பார்த்து திருந்துங்க என நெட்டிசன்ஸ் விளாசித்தள்ளியுள்ளனர்.