நடிகை கவுதமி மிகவும் கடின உழைப்பாளி' -குஷ்பு புகழாரம்
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகியது பற்றி நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் இன்று பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகியது பற்றி நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது சக உறுப்பினரான கவதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்… அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர். அவரது எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கவுதமி விலகியது மன வேதனையை அளித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.