செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (10:42 IST)

ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.

ஆண்ட்ரியா தற்போது ஒரு சில படங்களில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நடித்துள்ள மற்றொரு படமான ‘கா’ மார்ச் மாதம் 29 ஆம் தேதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் காட்டைப் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது. மேலும் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார் என்பதும் போஸ்டரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.