புதன், 26 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:31 IST)

எங்க வீட்டுப் பிள்ளை... டுவிட்டர் செய்தி டுபாக்கூர் என நடிகை விளக்கம்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு, எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. அதேநேரம், எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது படப்பெயரை விஜய் படத்துக்கு வைத்தால் போராட்டம்தான் என்று எம்ஜிஆர் ரசிகர்கள் அறிவித்திருப்பதோடு, வரும் 14 -ஆம் தேதி விஜய் வீட்டுமுன் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.


 

 
இந்நிலையில் நடிகை அபர்ணா வினோத்தும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
அபர்ணா வினோத் விஜய் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் படத்தின் பெயர், எங்க வீட்டுப் பிள்ளை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார். இப்போது அவரிடம் இது பற்றி கேட்டால், அது யாரோ டுபாக்கூர் உருவாக்கிய ட்விட்டர் பக்கம். அது என்னுடையதே இல்லை என்று பல்டியடிக்கிறார். மேலும், விஜய் படத்தின் பெயர் இதுதான் என்று நான் எங்கேயும் கூறவில்லை என்கிறார் சத்தியம் செய்யாத குறையாக.
 
என்னதான் படத்தின் பெயர்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவித்துவிட வேண்டியதுதானே.