பிந்து மாதவியுடன் பிறந்த நாளை கொண்டாடிய வையாபுரி - வைரல் வீடியோ
நடிகர் வையாபுரி தனது பிறந்த நாளை நடிகை பிந்து மாதவியுடன் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
வையாபுரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏறக்குறைய 70 நாட்களுக்கும் மேல் தாக்குப்பிடித்தார். அப்போது அங்கு இருந்த பலருடனும் அவர் நெருங்கிப் பழகினார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை, அவரது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது, விருந்தாளியாக நடிகை பிந்து மாதவி அங்கு சென்று வையாபுரிக்கு வாழ்த்துக்கள் கூறி, கேக் ஊட்டினார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.