ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (08:25 IST)

நள்ளிரவில் வெளியான 'சொடக்கு' குத்துப்பாட்டு. அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற ஒரு குத்து பாடலான 'சொடக்கு' என்ற பாடல் டீசர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது.



 
 
இன்று அனிருத்தின் பிறந்த நாளை அடுத்து இந்த பாடலின் டீசர் வெளியாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலின் டீசர் அனிருத்துக்கு பிறந்த நாள்பரிசாக அமைந்துள்ளது.
 
வரும் பொங்கல் தினத்திற்கு வெளியாகும் என்று படகுழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.