1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (14:28 IST)

ஒரே நடிகையுடன் கும்மாளம் போடும் நடிகர்கள்

நெருங்கிய நண்பர்களான விஷால், கார்த்தி, ஆர்யா, விஷ்ணு விஷால் நான்கு பேரும், ஒரே நடிகையுடன் கும்மாளம்  போடுகிறார்களாம்.

 
பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் கேத்தரின் தெரேசா. பிறகு, விஷால் ஜோடியாக ‘கதகளி’ படத்தில் நடித்தார். அதன்பிறகு, சமீபத்தில் வெளியான ‘கடம்பன்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்திருந்தார். தற்போது, விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கதாநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி நண்பர்கள் நான்கு பேரும் ஒரே நடிகையுடன்  அடுத்தடுத்து நடிப்பது, கோடம்பாக்கத்தில் கிசுகிசு பரவி வருகிறது.
 
இந்நிலையில், இந்த நண்பர்கள் டீமில் ஒருவரான ஜெயம் ரவியின் நடிகையும் இதேபோல அடுத்தடுத்து நடிக்க உள்ளார். ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயீஷா, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’  படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார். அடுத்து இவர் ஜோடி சேரப்போவது ஆர்யாவா? விஷ்ணு விஷாலா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.