1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:30 IST)

கேரளாவில் கனமழை : நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பார்க்கும் இடமெங்கும் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் சீற்றத்துக்கு இதுவரை 73 பேர் பலியாகி விட்டனர்.
 
இந்நிலையில், பலரும் கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து ரூ.25 லட்சத்தை நிதியாக கொடுத்திருந்தனர். அதேபோல், நடிகர் கமல், நடிகை ரோஹிணி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். மேலும், கேரள மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என அவரின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.