விஜய் என் நடிப்புக்கு ரசிகர்… பெருமிதப்படும் இயக்குனர்!
எஸ் ஜே சூர்யா, நடிகர் விஜய் தன் நடிப்பை ரசிப்பார் என்று சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் என்னுடைய நடிப்பை நடிகர் விஜய் மிகவும் ரசிப்பார். என்னுடைய நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலரை பார்த்து நள்ளிரவு போன் செய்து நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார். எனக் கூறியுள்ளார்.