1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (17:55 IST)

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” 
 
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
 
இவ்விழாவினில்..
 
இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. 
 
இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம்.  பல வருடக் கனவு இது.  இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி  இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது.  அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள். 
 
இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியதாவது.....
 
இது என் முதல் படம்,  நான் பல டீவி  விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது.  இந்தப்படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்
பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள். 
 
நடிகை விஷ்ணு பிரியா பேசியதாவது......
 
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாப்பாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த  ஆதரவாக இருந்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி.
 
நாயகி அக்ஷயா கந்தமுதன் 
பேசியதாவது.....
 
எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே  தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம்,  அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
நடிகர் வெற்றி பேசியதாவது…....
 
எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப்படம் கிடைத்தது.  கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப்படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.