செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (23:15 IST)

நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்..புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இன்று தனது படக்குழுவினருடன் இணைந்து அவர் தனது பிறந்தநாள் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள்  இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நேற்று மாலை, பாண்டிராஜ் இயகக்த்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூர்யா நடித்துவரும் சூர்யா40 படத்தின் தலைப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் எனப் பெயரிட்டுள்ளனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வரும் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

அதேபோல் ஞானவேல்ராஜா இயக்கத்தில் சூர்யா வக்கீலாக நடித்துவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. இப்படத்திற்கு பீம்ஜி எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சூர்யா தனது பிறந்தநாளை எதற்கும்துணிந்தவன் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. a

மேலும்.  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.