1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 1 மே 2017 (09:25 IST)

'தல' என்றாலே தன்னம்பிக்கைதான்! இது உலகத்துக்கே தெரியும்: சிவகார்த்திகேயன்

இன்று தல அஜித்தின் பிறந்த நாள். அஜித்தின் பிறந்த நாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகச்சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகினர்களும் அஜித்துக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




 



இந்த நிலையில் அஜித், விஜய்யை அடுத்து கோலிவுட்டில் பெரிய ஸ்டாராக குறுகிய காலத்தில் முன்னேறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டரில், 'நான் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அதிகளவில் தன்நம்பிக்கை அளிக்கும் தல அஜித் சாருக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள். அஜித்துன்னாலே தன்னம்பிக்கைதான். இது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்' என்று பதிவு செய்துள்ளார். மேலும் பல கோலிவுட் நட்சத்திரங்கள் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக கூறி வருகின்றனர்.