திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (20:33 IST)

நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

sathya raj mother
தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர் சத்யராஜ். இவரது தாயார் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) வயது மூப்பு காரணமாகக் காமானார். அவருக்கு வயது (94).

நாதாம்பாளுக்கு சத்யராஜ், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

தன் தாயார் மறைந்த செய்தியை அறிந்த நடிகர் சத்யராஜ் ஹைதாராபாத் படப்பிடிப்பில் இருந்து கோயம்புத்தூருக்கு விரைந்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.