செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:54 IST)

யோகி பாபு சொல்றது பன்ச்… காமெடி இல்லை – நடிகர் ரமேஷ் கண்ணா அதிருப்தி!

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டாலும் ரமேஷ் கண்ணா, கே எஸ் ரவிக்குமாரின் பல படங்களில் இணை இயக்குனராகவும் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சூர்யா நடித்த ஆதவன் படத்துக்குக் கதை வசனம் எழுதியதும் ரமேஷ் கண்ணாதான்.  பாண்டியராஜனின் உதவி இயக்குனராக திரைப்ப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ரமேஷ் கண்ணா இயக்கிய ஒரே ஒரு படம் தொடரும்.

அ‌ஜித், தேவயானி, ஹீரா நடித்த தொடரும் மலையாள படத்தின் ரீமேக்காகும். துரதிர்ஷ்டமாக மலையாளத்தில் வெற்றிபெற்ற இப்படம் தமிழில் ச‌ரியாகப் போகவில்லை. தொடரும் தோல்விக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக தொடர்ந்து நடித்தார். விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ் திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்போது அவருக்கு பெரியளவில் சினிமா வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் தற்போதைய படங்களில் இருக்கும் நகைச்சுவை குறித்து பேசியுள்ள அவர் “இப்போது படங்களில் எல்லாம் காமெடி எங்க இருக்கு. கடுப்புதான் வருது. யோகி பாபு என்னமோ பன்ச் அடிக்கிறார். அது எல்லாம் காமெடி இல்லை” எனக் கூறியுள்ளார்.