1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (23:03 IST)

சம்பளத்தை உயர்த்திய நடிகர் பிரபாஸ்...

பிரபாஸ்
ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர்  நடிகர் பிரபாஸ். இவர் தற்போது, ஆதிபுரூஸ்,  சலார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ.100 கோடி பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஷாகோ படமும், ராதே ஷ்யாம் படமும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில்,. ஓம்வுத் இயக்கத்தில் பிரபாஸ், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் ஆதிபுரூஸ் படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.