செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (11:16 IST)

படப்பிடிப்பில் நடிகர் ஜெய்க்குக் காயம்… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் இப்போது சுந்தர் சி க்கு வில்லனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை 28 படத்தில் நடித்தவர்களில் கதாநாயகனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர் ஜெய். அவர் நடித்த சுப்ரமண்யபுரம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டான நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் விட்டதால் இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளார். அதனால் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அதைத் தவிர்த்து சுசீந்தரன் இயக்கும் இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனால் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளாராம். இந்த படத்தை சுந்தர் சியே தயாரிக்கும் நிலையில் அவரின் உதவியாளர் பத்ரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் ஜெய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.