வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:28 IST)

நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜிக்கு 'யூத் ஐகான் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது!

கோவை, ஐசிடி அகாடெமி நேற்று தனது ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் 2024 விழாவை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அடுத்த தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பது மற்றும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சப்மிட்டில் பல்வேறு கலந்துரையாடல்கள், வேலைக்கூடங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது.
 
இதில் நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு யூத் ஐகான் 2024 விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வழங்கி கெளரவித்தார். சமூகத்திலும், திரைத்துறையிலும் அவர் ஏற்படுத்திய நல்ல மாற்றங்களுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
 
விருது பெற்ற பின்பு ஆர்ஜே பாலாஜி கூறியதாவது....
 
இந்த விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமையாக உள்ளது. சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து உழைக்க எனக்கு இது உத்வேகம் கொடுக்கிறது. இளைஞர்கள் அவர்களது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற உந்துதலை இது வழங்குகிறது” என்றார். 
 
இந்த விருது அவரது முயற்சிகளை மதிப்பதோடு மட்டுமல்லாது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைய தலைமுறையின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது என்றார்.